சவுண்ட் சர்வீஸ் கடையான மேல்நல்லாத்தூர் சாலை

மேல்நல்லாத்துார், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சியில் உள் கண்ணகி தெருவில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் தனிநபர் ஒருவர், தன் வீட்டின் முன் சாலையை ஆக்கிரமித்து, 'பிரியா ஆடியோ சப்ளையர்ஸ்' எனும் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு பயன்படும் வகையில் சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளார்.

இவ்வாறு சாலையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டுள்ளதால், இந்த வழியாக வழியே செல்லும் குடியிருப்புவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement