அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,

பெங்களூரு: அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது அரசியலைமைப்புகளுக்கு எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடகா அரசு அண்மையில் சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகா அரசின் இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஹொசபலே கூறியதாவது; மத அடிப்படையிலா இடஒதுக்கீடுகளை அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளாது. அப்படி செய்பவர்கள் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள். ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா இருந்த போது, முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஐகோர்ட்களும், சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்தது, எனக் கூறினார்.




