பா.ஜ., பெண் நிர்வாகிகள் மீது வழக்கு

திருத்தணி, திருத்தணி நகர பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகள், ராதிகா, கலையரசி மற்றும் இந்திராணி ஆகிய மூவரும், கடந்த 20ம் தேதி மாலை 3:00 மணியளவில், திருத்தணி வள்ளியம்மாபுரம் பகுதியில் இயங்கி வரும் இரண்டு 'டாஸ்மாக்' கடைகளின் சுவரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் ஒட்டினர். அதில், 'இது அப்பா கடை' என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது.

பின், அங்கிருந்து தப்பிச் சென்ற பெண்கள் மீது, டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கிரி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement