புல்டோசர் பயன்படுத்துவோம்!

நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களிடம் சேதங்களுக்கான இழப்பீடு வசூலிக்கப்படும். பணத்தை செலுத்தவில்லை என்றால், அவர்களின் சொத்துகள் விற்கப்படும். தேவைப்பட்டால் புல்டோசர்களை பயன்படுத்துவோம். வன்முறையில் வங்கதேசத்தினர் ஈடுபட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவேந்திர பட்னவிஸ், மஹா., முதல்வர், பா.ஜ.,
விளம்பரத்துக்கான திட்டம்!
மோடி அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டம் விளம்பரத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் திட்டங்களுக்கான சிறந்த உதாரணமாக உள்ளது. 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு 10 வாக்குறுதிகளை பா.ஜ., அளித்தது; ஆனால் அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
நடவடிக்கை இல்லையே!
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பா.ஜ.,வைக் காட்டிலும், தான் சத்ரபதி சிவாஜி மஹாராஜை அதிகம் மதிப்பதாக கூறுகிறார். அப்படியென்றால் ஏன் அவுரங்கசீபை புகழ்ந்த அபு ஆஸ்மியை இன்னும் அவர் கட்சியில் வைத்து இருக்கிறார்? இதன் பொருள் அபு ஆஸ்மி, அகிலேஷ் யாதவின் சம்மதத்துடனேயே அவுரங்கசீபை புகழ்ந்துஉள்ளார் என்பதாகும்.
கேசவ் பிரசாத் மவுரியா, உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,
மேலும்
-
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,
-
அசத்தல் ஆட்டம்: மும்பைக்கு எதிரான போட்டியில் மாஸ் காட்டிய ருதுராஜ்
-
நகரில் பராமரிப்பில்லாத பூங்காக்கள்; நகராட்சி கண்டுகொள்ளாமல் அவலம்
-
அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்: மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உறுதி
-
அமராவதி அணை துார்வாரும் திட்டம் தமிழக அரசு நிதி ஒதுக்குமா?
-
அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை