மாநகராட்சி நீச்சல் போட்டி 70 பணியாளர்கள் உற்சாகம்

சென்னை,
சென்னை மாநகராட்சி ஆண்டு விளையாட்டு போட்டிகள், கடந்த 10ம் தேதி முதல் நகரில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. இதில், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என, 2,416 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று காலை, பெரியமேடு, மைலேடி பூங்கா நீச்சல் குளத்தில், நீச்சல் போட்டி நடந்தது. அதில், மாநகராட்சி பணியாளர்கள், 70க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
இதில், 50 மீ., மற்றும் 25 மீ., * 4 ரிலே உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து போட்டிகள் முடிவில், 'ரிலே' பிரிவில், கவுன்சிலர் சொக்கலிங்கம் பங்கேற்ற அணி முதலிடத்தை பிடித்து, வெற்றி பெற்றது.
அதேபோல், 50 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 மீ., போட்டியில் சபாபதி, முத்தையா, மூர்த்தி ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து, 35 வயது பிரிவில், தலைமை அலுவலகம், விஜய் முதலிடத்தையும், வடிகால் பணி துறையின் வினோத் மற்றும் அசோக் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் வென்றனர். நாளை நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன.
மேலும்
-
பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே? :சட்டசபை தேர்தலில் வட மாவட்டங்களிலும் ஓட்டை அள்ள...; மிகப்பெரிய காய் நகர்த்தலுடன் தி.மு.க., வார்த்தை ஜாலம்
-
வேலை என்னை மாற்றியது!
-
முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி; உடன் சென்றவர் தப்பினார்
-
மாணவர்களிடையே ஜாதி மோதல்; கண்டித்து அனுப்பிய நீதிபதி
-
சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்
-
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது