முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி; உடன் சென்றவர் தப்பினார்
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே முயல் வேட்டைக்கு சென்ற கூலித்தொழிலாளி முருகன் 37, பருத்தி காட்டில் மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். உடன் சென்ற உறவினர் மாடமுத்து தப்பினார்.
ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் உறவினர் மாடமுத்துவுடன் நேற்று முன் தினம் நள்ளிரவு பிள்ளையார் நத்தம் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். அப்போது மாரியப்பன் என்பவரின் பருத்தி தோட்டத்தில் இருவரும் நடந்து சென்ற போது மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி முருகன் துாக்கி எறியப்பட்டு சம்பவயிடத்திலேயே இறந்தார். மாடமுத்து உயிர் தப்பினார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் சென்று முருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் பருத்தி தோட்டத்தில் அனுமதி பெற்று மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: ஸ்ரேயாஸ் அரைசதம்: பஞ்சாப் அணி 15 ஓவரில் 156 /4 ரன்
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை