டிவிஷன் ஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் அணி வெற்றி
சென்னை,சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கின்றன.
வேளச்சேரி கிளப், எம்.சி.சி., - அடையாறு யங்கஸ்ட், இந்திரா காந்தி உள்ளிட்ட 33 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் எட்டு குழுவாக பிரிந்து, லீக் முறையில் வார இறுதி நாட்களில் மட்டும் மோதுகின்றன.
அந்த வகையில், நேற்று காலை நடந்த முதல் போட்டியில், செயின்ட் ஜார்ஜ் மற்றும் சிவலிங்கம் மெமோரியல் அணிகள் எதிர்கொண்டன. அதில், 3 - 1 என்ற கணக்கில் செயின்ட் ஜார்ஜ் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் ஆட்டத்தில், பல்ஸ் கிளப் அணி, 4 - 1 என்ற கோல் கணக்கில் ஹொல்ஸ் கிளப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதேபோல், செயின்ட் பால்ஸ் கிளப் மற்றும் திருமால் ஹாக்கி அகாடமி அணி, பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் துவக்கத்தில், இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, செயின்ட் பால்ஸ் அணி, முடிவில், 7 - 3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இன்றும் போட்டிகள் நடக்கின்றன.
மேலும்
-
கழிவுநீரோடை குழியில் புதைத்து கான்கிரீட் கலவையால் மூடி பங்குதாரர் கொலை; கேட்டரிங் உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது
-
பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே? :சட்டசபை தேர்தலில் வட மாவட்டங்களிலும் ஓட்டை அள்ள...; மிகப்பெரிய காய் நகர்த்தலுடன் தி.மு.க., வார்த்தை ஜாலம்
-
வேலை என்னை மாற்றியது!
-
முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி; உடன் சென்றவர் தப்பினார்
-
மாணவர்களிடையே ஜாதி மோதல்; கண்டித்து அனுப்பிய நீதிபதி
-
சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்