டி.என்.சி.ஏ., கிரிக்கெட் லீக் எழும்பூர், ஐ.சி.எப்., வெற்றி

சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள், நகரின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.

மெரினா விவேகானந்தா மைதானத்தில் மூன்றாவது டிவிசன் ஆட்டத்தில், ஐ.சி.எப்., மற்றும் ரைசிங் ஸ்டார் அணிகள் விளையாடின. இதில், முதலில் பேட் செய்த ஐ.சி.எப்., அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு, 218 ரன்கள் அடித்தது. அடுத்து பேட் செய்த ரைசிங் ஸ்டார் அணி, 45.4 ஓவர்களில் 191 ரன்கள் அடித்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராயப்பேட்டை, அமீர் மஹாலில் நடந்த போட்டியில்சர் ஆஷ்லி பிக்ஸ் நிறுவனம் அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 226 ரன்கள் அடித்தது. அடுத்து பேட் செய்த, புரசைவாக்கம் சி.சி., அணி 42.3 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்பிற்கு, 227 ரன்கள் அடித்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதேபோல, 'டி ஆன் டி' இந்தியா அணி 48.1 ஓவர்களில் 244 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அடுத்து பேட் செய்த, எழும்பூர் சி.சி., அணி, 48.4 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு, 245 ரன்கள் அடித்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement