எஸ்.டி.ஏ.டி., சிறப்பு விடுதியில் சேர ஏப்., 8ல் மாநில தேர்வு போட்டி
சென்னை,
எஸ்.டி.ஏ.டி.,யின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் விண்ணப்பித்து, மாநில தேர்வு போட்டியில் பங்கேற்க, கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், ஆறு இடங்களில் விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், உணவு கூடிய, சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன.
இவ்விடுதிகளில் சேர விருப்புமுள்ள கல்லுாரி மாணவ, மாணவியர், www.sdat.tn.gov.in என்ற தளத்தில், ஆன்லைனில், ஏப்., 6, மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 95140 00777 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
'ஆன்லைனில்' விண்ணப்பித்த மாணவ, மாணவியர் மட்டுமே, ஏப்., 8ம் தேதி காலை 7:00 மணிக்கு நடக்கும் மாநில தேர்வு போட்டியில் நேடியாக பங்கேற்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்வு இடம் விளையாட்டுகள்
* சென்னை, நேரு விளையாட்டு அரங்கம் கூடைப்பந்து - மாணவியர்
கால்பந்து --மாணவியர்
குத்துச்சண்டை -- -இருபாலர்
ரக்பி- மாணவியர்
வாலிபால் -இருபாலர்
தடகளம் - இருபாலர்
ஜூடோ - இருபலர்
வாள் விளையாட்டு - இருபாலர்
கையுந்துபந்து - இருபாலர்
கால்பந்து - மாணவர்கள்
பளூதுாக்குதல் - இருபாலர்
* எழும்பூர், ஹாக்கி அரங்கம் ஹாக்கி -இருபாலர்
* நேரு பார்க், கீழ்ப்பாக்கம் கபடி - இருபாலர்
மேலும்
-
மாணவர்களிடையே ஜாதி மோதல்; கண்டித்து அனுப்பிய நீதிபதி
-
சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்
-
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது
-
ரயிலில் கஞ்சா: மதுரைக்காரர்கள் கைது
-
நடைபாதையில் 'தடை' எதற்கு?
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 85 கிலோ கஞ்சா கட்டைக்காடு பகுதியில் பறிமுதல்