உலக தண்ணீர் தின விழா


உலக தண்ணீர் தின விழா

அரூர்:அரூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக தண்ணீர் தினம் மற்றும் தேசிய வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் காடுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தண்ணீரை வீணாக்க மாட்டோம் என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
விழாவில், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement