மாவட்ட கிரிக்கெட் போட்டி வீல்ஸ் இண்டியா அணி அபாரம்

சென்னை:திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், டி.வி.எஸ்., லுாகாஸ் நிறுவனம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள், ஆவடியில் உள்ள ஹிந்து கல்லுாரியில் நடந்து வருகின்றன.
இதில், 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் 50 ஓவர் அடிப்படையில் நடக்கின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 'இண்டோ ஜப்பான்' அணியும், 'வீல்ஸ் இண்டியா' அணியும் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் களமிறங்கிய இண்டோ ஜப்பான் அணி, 21.2 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 65 ரன்னில் சுருண்டது.
அடுத்து களமிறங்கிய வீல்ஸ் இண்டியா அணி, 8.4 ஓவரில், விக்கெட் இழப்பின்றி, 70 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் கவுதம் 54 ரன்கள் குவித்தார். தவிர, 16 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.