கழிவு நீர் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கூலித்தொழிலாளி பலி
ஆர்.கே.நகர்:தண்டையார்பேட்டை, சுண்ணாம்பு கால்வாயோரம் கழிவு நீர் அகற்றும் குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைப்பதற்காக, அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, கழிவு நீரில் மூழ்கிய நிலையில், வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஆர்.கே., நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், உயிரிழந்தவர் வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நடைமேடையைச் சேர்ந்த சதீஷ்குமார், 35, என்பதும், கழிவு நீரகற்றும் ராட்சத குழாயில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது.
சென்னை மாநகராட்சி குடிநீர் வாரிய ஒப்பந்ததாரரான, கொடுங்கையூர், இந்திரா நகரைச் சேர்ந்த கார்த்திக், 36, என்பவருடன் கடந்த 20 நாட்களாக வேலை செய்து வந்தார்.
இவருடன், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த முருகன், 30, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த அஜித்குமார், 23, ஆகியோர் பணி புரிந்தனர். நேற்று முன்தினம் மாலை கார்த்திக், முருகன், அஜித்குமார் ஆகிய மூவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பணித்தளத்திற்கு மதுபோதையில் வந்த சதீஷ்குமார், பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஆர்.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
ஸ்ரேயாஸ், ஷஷாங்க் அதிரடி: பஞ்சாப் அணி 243 ரன்கள் குவிப்பு
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை