பிளாஸ்டிக் சோதனையில் அதிகாரிகள்பாரபட்சம் காட்டுவதாக கண்டனம்


பிளாஸ்டிக் சோதனையில் அதிகாரிகள்பாரபட்சம் காட்டுவதாக கண்டனம்


பாப்பிரெட்டிப்பட்டி:--கடத்துார் பேரூராட்சியிலுள்ள கடைகளில் நேற்று, தர்மபுரி பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர் உள்ளிட்ட பணியாளர்கள், தடை செய்த பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பயன்படுத்திய, 15 கடைகளுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அப்போது சில பெரிய கடைகளில் சோதனை செய்யாமல் சென்றனர். இதனால் வியாபாரிகள், அதிகாரிகளிடம் கடும் வாக்கு
வாதம் செய்து, பிளாஸ்டிக் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து, கடத்துார் நகர வணிகர்கள் சங்க தலைவர் கண்ணப்பன் கூறுகையில்,'' பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, ஒட்டுமொத்த விற்பனை செய்வோர் மீதும், தயாரிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் சோதனையில் பாரபட்சம் பார்த்து, அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

Advertisement