குழாய் பதித்த பள்ளம் சீரமைக்க ரூ.3 கோடி செலுத்தியது வாரியம்

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 193, 197, 200 ஆகிய வார்டுகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதை சீரமைக்க, மாநகராட்சி சார்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, குடிநீர் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில், நிர்ணயிக்கப்பட்ட, 3.07 கோடி ரூபாயை, மாநகராட்சிக்கு குடிநீர் வாரியம் செலுத்தியது.

அதையடுத்து, அடுத்த மாதம், பள்ளம் தோண்டப்பட்டதால் சேதமான சாலைகள் சீரமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement