போதையில் தகராறு மூன்று ரவுடிகள் கைது

புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியில், மதுபோதையில் பொதுமக்களுடன் தகராறு செய்த வாலிபர்களை, புளியந்தோப்பு போலீசார் நேற்று அதிகாலை பிடித்து வந்து விசாரித்தனர்.

அதில், புளியந்தோப்பு, கே.எம்.கார்டனை சேர்ந்த விஜய், 21 ; வியாசர்பாடி நேரு நகரைச் சேர்ந்த ரவி, 25 ; மாதவரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சஞ்சய், 21, என்பது தெரிந்தது.

இதில், விஜய் மீது, அடிதடி உட்பட ஒன்பது வழக்குகளும், ரவி மீது, வழிப்பறி உட்பட ஆறு வழக்குகளும் உள்ளன. இருவரும், 'சி' பிரிவு ரவுடிகள்.

சஞ்சய் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. மூவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜரப்டுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement