29ல் மாவட்ட ஹாக்கி அரையிறுதி செயின்ட் பால், ஸ்போர்ட்டிங் அணிகள் மோதல்
சென்னை:சென்னை மாவட்ட ஹாக்கி லீக் சாம்பியன் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற செயின்ட் பால்ஸ், ஸ்போர்ட்டிங் அணிகள், அரையிறுதியில் மோதுகின்றன.
சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் லீக் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்து வருகின்றன.
இப்போட்டியில், சென்னை மாவட்டத்தில் உள்ள 33 ஹாக்கி அணிகள், எட்டு குழுவாக பங்கேற்றுள்ளன. போட்டிகள் வார இறுதி நாட்களில் நடக்கின்றன.
இதன், காலிறுதி போட்டிகள் நேற்று துவங்கிய நிலையில், முதலாவது போட்டியில், ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணியுடன், பால்ஸ் மனமகிழ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
இதில், ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
அடுத்து நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில், செயின்ட் பால் மனமகிழ் அணியும், மெட்ராஸ் புளு அணியும் மோதின. இப்போட்டியில், செயின்ட் பால் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மார்ச் 29ல் நடைபெறும் அரையிறுதி போட்டியில், செயின்ட் பால்ஸ் மனமகிழ் அணியுடன் ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி மோத உள்ளது.
மேலும்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்