இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணி: பழனிசாமி பெருமிதம்

ஓமலுார்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்தநாளை ஒட்டி, சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் மேற்கு ஒன்றியம் சார்பில், மாநில அளவில், ஆண்கள், பெண்கள் மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் வேலக்கவுண்டனுாரில் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து, 34 ஆண்கள், 23 பெண்கள் அணிகள் மோதுகின்றன.
இரண்டாம் நாள் போட்டியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று மாலை தொடங்கி வைத்து, வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் போட்டியை பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், 12,524 ஊராட்சிகள், 500-க்கும் மேற்பட்ட டவுன் பஞ்சாயத்துகளில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை, தி.மு.க., அரசு கைவிட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு ஏற்படுத்தி கொடுத்தது, அ.தி.மு.க., தான்.
வீரர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, அவர்கள் திறமையை வெளிப்படுத்த, அ.தி.மு.க., சார்பில், 'இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணி' தொடங்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள வீரர்களுக்கு, உபகரணங்கள் அனைத்தும், அ.தி.மு.க., சார்பில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
ஏ.சி., மெக்கானிக் பலி
-
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பட்டினி போராட்டம்
-
சாத்துாரில் பங்குனி பொங்கல் கொடியேற்றம்
-
சுண்ணாம்பு கலந்த குடிநீர் வினியோகத்தால் சிறுநீரகம் பாதிப்பு: குடிநீர் திட்டங்களிலே முழுமையான சப்ளை எதிர்பார்ப்பு
-
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம்: அண்ணாமலை
-
சீர்கெட்ட சட்டம் - ஒழுங்கு; கார்த்தி சொல்வது நிஜம்