சாத்துாரில் பங்குனி பொங்கல் கொடியேற்றம்

சாத்துார்: சாத்துார் மாரியம்மன் காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சாத்துார் மாரியம்மன் காளியம்மன் கோயில் நுாறு ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். மார்ச் 30 ல் பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுகோயில் வாசலில் கொடியேற்றம் நடந்தது.

அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தன. பின் காலை 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ரவி, நகரின் முக்கிய பிரமுகர்கள் ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நாள்தோறும் அம்மன் சப்பரம், ரிஷபம், சிம்மம், பூப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும்.

Advertisement