எதிர்க்கட்சி அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

12

சென்னை: 'தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, அனைத்து தமிழக எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடர்பாக, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்தோம். இது தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மறுசீரமைப்பு தொடர்பாக எச்சரிக்கை மணியாக சட்டசபை யில் ஏற்கனவே தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாநிலத்தில் எந்த அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறதோ, அதேபோல் தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது.


தமிழகம் முன்னெடுத்து செல்லக் கூடிய தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த முன்னெடுப்பிற்கு துணை நிற்க தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கை குழுவில் பங்கேற்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும் என்ற முழக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்று நமது மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெ ற்றிடவும், தமிழக எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement