ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து கோரி மனு தாக்கல்

சென்னை: பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 24) விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி., பிரகாஷ் குமார். படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது காதல் மனைவி சைந்தவி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
தங்களுக்கு விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் இன்று (மார்ச் 24) மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது பிரகாஷ் குமார் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதையடுத்து பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.











மேலும்
-
மாயமான பிளஸ் 1 மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு
-
மாற்றுத்திறன் மனைவி தாக்கு கணவர், கொழுந்தன் கைது
-
பாலினம் கண்டறியும் கருவியுடன் காரில் சுற்றிய 3 பேர் கைது
-
பாலினம் கண்டறியும் கருவியுடன் காரில் சுற்றிய 3 பேர் கைது
-
கே.ஆர்.எஸ்., அணையின் ஒரு மதகு திடீர் திறப்பு; 24 மணி நேரத்தில் 2,000 கன அடி நீர் வெளியேற்றம்
-
முதல்வர் இல்லம் ஏப்., 15ல் முற்றுகை