கேரள பா.ஜ., தலைவர் ராஜிவ் சந்திரசேகர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1

புதுடில்லி: கேரள பா.ஜ., தலைவராக ராஜிவ் சந்திரசேகரை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.



கேரளாவில் பா.ஜ., மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் புதிய தலைவர் பற்றிய விவாதமும், ஆலோசனைகளும் நடைபெற்றன. முடிவில், மாநிலத்தின் புதிய பா.ஜ., தலைவராக ராஜிவ் சந்திரசேகரை இருவரும் பரிந்துரைத்தனர்.


இதையடுத்து, அவர் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனு பரிசீலிக்கப்பட்டு இன்றே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், கேரள பா.ஜ., தலைவராக ராஜிவ் சந்திரசேகரை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


கர்நாடகாவில் இருந்து 3 முறை ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.தொழிலதிபரான ராஜிவ் சந்திரசேகர், கடந்தாண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசின் சசி தரூரை எதிர்த்து திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement