நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் அச்சம்!

வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று (மார்ச் 25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளது.


நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் இந்திய நேரப்படி காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர்.


தெற்கு தீவின் தென்மேற்கு பகுதியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் தெரிவித்துள்ளது. தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.



நியூசிலாந்திலேயே பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் 1931ம் ஆண்டு ஹாக்ஸ் பகுதியில் ஏற்பட்டது தான். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி உள்ளது. 256 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement