காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: போப்

11


ரோம்: காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

கத்தோலிக்க திருச்சடையின் தலைவரான போப் பிரான்சிஸ்,88, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்.,14ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நுடல்நலம் தேறியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சமீபத்தில் தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் போப் பங்கேற்ற புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் கூறியதாவது: காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை துவங்கியதால் ஏராளமான உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டதை கண்டு கவலை அடைந்தேன். உடனடியாக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அனைத்து பிணைக் கைதிகளை விடுவித்து உறுதியான போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். காசா முனையில் மனிதாபிமான சூழ்நிலை மீண்டும் மோசமாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement