ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்

புதுடில்லி:'' வாட்ஸ் அப் செயலி உதவியுடன், கிரிப்டோ கரன்சி தொடர்பான கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டது,'' என லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
கடந்த 13ம் தேதி லோக்சபாவில் புதிய வருமான வரி மசோதா 2025 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வரி ஏய்ப்பையும், நிதி மோசடியையும் தடுக்க வரி அதிகாரிகளுக்கு டிஜிட்டல் ஆவணங்களை அணுக அனுமதிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று.
மொபைல்போனில் ' என்கிரைப்டட்' செய்திகள் மூலம் ரூ.250 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ்அப் செயலியில் இருந்த செய்தி மூலம், கணக்கில் வராத கிரிப்டோ பணம் குறித்த தகவல் கிடைத்தது. கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்க வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் உதவியாக இருந்தது.
பணத்தை மறைக்க அடிக்கடி செல்லும் இடங்களை கூகுள் மேப் செயலி கண்டுபிடித்து கொடுத்தது. இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆய்வு செய்த போது, பினாமி சொத்துகளின் உரிமையாளர் குறித்த விவரங்கள் தெரியவந்தன.இதுபோன்ற நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பத்துடன் வரி அமலாக்கம் குறித்த நடவடிக்கைகள் புதுப்பித்த நிலையில் வைத்து இருக்க உதவியது. கிரிப்டோகரன்சிகள் போன்ற சொத்துக்கள் கவனிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
இந்த மசோதாவானது, வாட்ஸ்அப், டெலிகிராம், இமெயில் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அணுக அதிகாரம் அளிக்கிறது. நிதி பரிமாற்றங்களை மறைக்க பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் சர்வர்களையும் அதிகாரிகளால் அணுக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.






மேலும்
-
பிரதமர் மோடி புத்திசாலி: டிரம்ப் மீண்டும் புகழாரம்
-
லஞ்ச வழக்கு; 16 ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி விடுதலை
-
அரசு நிலத்தை ஒட்டிய மனையை வாங்கும் போது ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அலுமினிய துகள்கள் கலந்த 'ஏஏசி' கற்கள் கட்டடத்துக்கு உறுதி தரும்!
-
மனிதர்களுக்காக படைக்கப்படவில்லை!
-
சினிமாவில் நடிக்கும் 'நாயகர்கள்' சந்திக்கும் சவால்கள்