பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இருந்து, மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி மேற்கொள்வோரும், விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ரயில்வே சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு செல்லும் சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருவதால், அப்பகுதி பாசி படர்ந்த நிலையில் உள்ளது.

இதனால், இவ்வழியாக செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, ரயில்வே சாலையில் ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement