புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு

3

புதுடில்லி: 2025-26 ஆம் ஆண்டிற்கான, டில்லி பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.டில்லியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பா.ஜ., அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டாக அமைந்தது. டில்லி முதல்வர் ரேகா குப்தா, ரூ.1 லட்சம் கோடி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் திஹார் சிறைச்சாலை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டில்லி பட்ஜெட் 2025-26: முக்கிய அறிவிப்புகள்:

1. கல்வித் துறைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு.

2. சுகாதார மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புக்கு ரூ.12,500 கோடி

3. உள்கட்டமைப்பு & போக்குவரத்து ரூ. 9,000 கோடி

4. பசுமை டில்லி திட்டத்திற்கு ரூ.1,200 கோடி

5.பெண்கள் பாதுகாப்பு மற்று் சிசிடிவி கண்காணிப்பு விரிவாக்கத்திற்கு ரூ.1,500 கோடி

6. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ரூ.500 கோடி ஸ்டார்ட்அப் நிதி.

50,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள்.

உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இதில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பசுமை முன்முயற்சிகள் மீது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யமுனை நதியை சுத்தம் செய்தல், பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு, நீர் மற்றும் இணைப்பு உள்ளிட்ட பத்து முக்கிய பகுதிகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இது கடந்த பட்ஜெட்டை விட 31.5 சதவீதம் அதிகம்.

திஹார் சிறைச்சாலை 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான இந்த சிறைச்சாலை, 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் 9 மத்திய சிறைச்சாலைகளை கொண்டுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், திஹார் சிறைச்சாலை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அதற்காக, பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இந்த சிறைச்சாலை இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Advertisement