குறுகலான சாலையில் வாகனங்கள் செல்வதில் சிக்கல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில் இருந்து, காப்பு காடு வழியே மலையாங்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

சேதமடைந்து இருந்த இச்சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, கடந்தாண்டு இச்சாலை சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சாலை கூறுகளாகவும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலையில் உள்ளது.

இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கூறுகளாக உள்ள சாலையை இருவழிச் சாலையாக விரிவுப்படுத்த, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

துறை அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே, குறுகளாக உள்ள மருதம் -- மலையாங்குளம் சாலையை விரிவுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement