கிழக்கு கடற்கரை சாலையில் களைகட்டும் நுங்கு விற்பனை

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கொளத்துார், சீக்கனாங்குப்பம், முகையூர், வடபட்டினம், தென்பட்டினம் போன்ற பகுதிகளில் மா, பலா, பனை, தென்னை மற்றும் அதன் சார்ந்த தொழில்களில் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை காலம் துவங்கி, பகலில் காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், பொதுமக்கள் உடற்சூட்டைத் தணிக்க நுங்கு, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை உண்பது வழக்கம். அதற்கு ஏற்றது போல கோடை காலத்தில் நுங்கு, தர்பூசணி போன்றவை இப்பகுதியில் அதிக அளவில் கிடைக்கும்.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் நுங்கு, இளநீர் மற்றும் பதநீர் ஆகியவற்றை, கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் குடில்கள் அமைத்து, மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

நுங்கு 20 முதல் 30 ரூபாயும், பதநீர் லிட்டருக்கு 60 முதல் 70 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

இளநீர் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்லும் மக்கள், ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement