உடல் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மதுராந்தகத்தில் கவிழ்ந்து விபத்து

மதுராந்தகம்:சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி, 46. இவரது, கணவர் குட்டி, 50, என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தாம்பரம் பகுதியிலுள்ள வீட்டிற்கு, புதுச்சேரியில் இருந்து தனியார் ஆம்புலன்சில் எடுத்து வந்துள்ளனர்.
அப்போது, மதுராந்தகம் அடுத்த அத்திமனம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வடமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளனர்.
அவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதாமல் இருக்க, ஓட்டுனர் திடீரென 'பிரேக்' பிடித்துள்ளார்.
இதில் ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி, சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில், ஆம்புலன்சில் பயணம் செய்த குட்டியின் மனைவி தேவி, மகன் இளங்கோ, உறவினர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உடனே, வேறு ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு, உடலை தாம்பரத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்