உரிமை கோராத வாகனங்கள்

திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் உரிமை கோரப்படாத, 612 வாகனங்கள், அனுப்பர்பாளையம் வெங்கமேடு மாதேஸ்வரன் கோவில் அருகில்; திருப்பூர் ராயபுரம் (கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் அலுவலகம் அருகில்) என, இரண்டு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.


தங்கள் வாகனங்கள் ஏதேனும் காணாமல் போய், இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, நேரில் பார்வையிட்டு தெரிவிக்கலாம். தங்கள் வாகனமாக இருப்பின், 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்கள் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் சமர்ப்பித்து வாகனங்களை பெற்று கொள்ளலாம். உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்துக்கு உட்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement