மல்யுத்தம்: சுனில் ஏமாற்றம்

அம்மான்: ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்திய வீரர் சுனில் குமார் தோல்வியடைந்தார்.
ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் நேற்று ஜோர்டானில் துவங்கியது. இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என மொத்தம் 30 பேர் பங்கேற்கின்றனர். நேற்று கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 87 கிலோ பிரிவில் இந்தியாவின் சுனில் குமார், காலிறுதியில் 10-1 என தஜிகிஸ்தானின் சுஹ்ரோப்பை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் 1-3 என ஈரானின் யாசின் யாஷ்டியிடம் தோல்வியடைந்தார்.
அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஜியாசின் ஹுவாங்கை சந்திக்கிறார்.
மற்ற இந்திய வீரர்கள் நிதின் (55 கிலோ), உமேஷ் (63), சாகர் தக்ரான் (77), பிரேம் (130) தங்களது போட்டிகளில் தோல்வியடைந்தனர்.

Advertisement