ஹவாலா பணப்பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நடிகை ரன்யா ராவ்

பெங்களூரு: தங்கக்கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்த, கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ் மகளும், நடிகையுமான ரன்யா ராவ், 34, கடந்த 3ம் தேதி இரவு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மது ராவ் நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், ' வெளிநாடுகளில் தங்கம் வாங்க ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு உள்ளார்,' எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும்
-
அமித் ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு; கூட்டணி குறித்து இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!
-
தென் கொரியாவில் விடாது எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி
-
ஹீரோ பைக்குகள் முன்பதிவு துவக்கம்
-
'ஒமேகா செய்கி என்.ஆர்.ஜி.,' இ.வி., ஆட்டோ குறைந்த எடை, அதிக ஆற்றல்
-
ஷைன் 100 ஹோண்டாவின் 'மைலேஜ் மாஸ்டர்'
-
ஸ்கிராம்பிளர் ஐகான் டார்க் டுகாட்டியின் 'பிளாக் ப்யூட்டி'