ஆதிவராகநத்தம் பள்ளி நுாற்றாண்டு விழா

புவனகிரி : புவனகிரி ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியை ராதிகா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் முத்துபரமசிவம், பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்லப்பாண்டியன், அண்ணாஜோதி, லதாசங்கர், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற பேராசிரியர் செல்வக்கணபதி, கிரீடு தொண்டு நிறுவன இயக்குனர் நடனசபாபதி ஆகியோர் விழாவை துவக்கி வைத்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ராபர்ட் ஏற்பாட்டில் பள்ளியை புரனமைத்து, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கினர். உறுதிமொழி ஏற்று நுாற்றாண்டு சுடர் ஏற்றினர். ஆசிரியை மணிமொழி நன்றி கூறினார்.

ஆசிரியர் ராஜமாணிக்கம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர் ஆனந்திமுத்துமாலை உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement