எகிப்தில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 6 பேர் பலி

கெய்ரோ: எகிப்தின் செங்கடலில் 45 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலியாகினர்.
வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின் செங்கடலில் உள்ள ஹர்கடா கடற்கரையில் சிந்துபாத் என்னும் நீர்மூழ்கிக் கப்பல், 45 சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. துறைமுகம் அருகே செல்லும் போது திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.
விபத்து குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த விபத்தில் 6 பேர் பலியானதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹுர்காடா பகுதி உலகப் பிரசித்தமான டைவிங் மையம், இந்த விபத்து பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கான விரிவான விசாரணை நடந்து வருகின்றன. எகிப்திய கடல் படை மற்றும் மீட்பு படைகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
தொழில்நுட்ப பழுது அல்லது ஆக்சிஜன் கசிவு காரணமாக கப்பல் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சர்வதேச நீர்மூழ்கி மீட்பு குழுக்கள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும்
-
30 டன் நிவாரண பொருட்களுடன் மியான்மர் கிளம்பியது இந்தியக் கப்பல்
-
4 நாட்களாக நீடித்த எல்.பி.ஜி., காஸ் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
-
தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக விளங்கும் கம்பராமாயணம்: கவர்னர் நெகிழ்ச்சி
-
டோங்கா தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 7.1 ஆக பதிவு
-
பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா, முன்னேற்றம் தரும் அரசு வேண்டுமா; அமித் ஷா பேச்சு
-
2வது வெற்றியைப் பதிவு செய்யுமா சென்னை; 183 ரன்கள் இலக்கு