பா.ஜ.,வினர் எதை பார்த்து பயப்படுகிறார்கள் என தெரியவில்லை: ராகுல்

24


புதுடில்லி: '' பா.ஜ.,வினர் எதை பார்த்து பயப்படுகிறார்கள் என தெரியவில்லை,'' என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் போது, பிரயாக்ராஜ் மஹா கும்பமேளா தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றிய போது, தனக்கு பேச அனுமதி வழங்கவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று குற்றம்சாட்டினார். மேலும் என்னை பற்றி ஆதாரமற்ற ஒன்றை சபாநாயகர் குறிப்பிட்டுவிட்டு அதன் பிறகு எனக்கு பேச வாய்ப்பு அளிக்காமலேயே லோக்சபாவை ஒத்தி வைக்கிறார். பார்லிமென்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்றார். இதற்கு பா.ஜ.,வினர் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் பேசியதாவது: என்னைப் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அவர்கள் எதை பார்த்து பயப்படுகின்றனர் என தெரியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement