பர்கூர் மலையில் 'கிணறு' ஒப்படைக்கும் விழா
அந்தியூர்: பர்கூர்மலை கிழக்குமலை பகுதியில் சோளகனை கிராமம் உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள நீர் ஊத்து அழிவின் விளிம்புக்கு சென்றது. இதனால் பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் ஊர்க்கிணறு புனரமைப்பு அமைப்பின் சார்பில், நான்கு மாதங்களாக நீர் ஊத்தில் புனரமைப்பு செய்து, கிணறாக மாற்றி அமைக்கப்பட்டது.
பணி நிறைவடைந்த நிலையில், சோளகனை கிராம மக்களிடம் கிணறு ஒப்படைக்கும் விழா நடந்தது. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். இதையொட்டி கலை நிகழ்ச்சியும் நடந்தது. ஊர்க் கிணறு புனரமைப்பு அமைப்பு, பழங்குடி மக்கள் சங்க உறுப்பினர்கள், கிணற்றில் இருந்து தண்ணீரை தீர்த்தக்குடத்தில் எடுத்து, சோளகனை பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட சிறுவர்கள், அப்பகுதி ஈஸ்வரன் கோவிலில் சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர்.
இதுகுறித்து பழங்குடி மக்கள் சங்கத்தினர் கூறியதாவது: சோளகனை சுற்று வட்டார மலைக் கிராமத்தில், 2௦க்கும் மேற்பட்ட போர்வெல் போட்டும் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளுக்கு உப தேவையாக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் பயனற்று உள்ளன. இந்நிலையில் நீர் ஊற்றை சீரமைத்து, மண்ணால் சுவர் கட்டியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அதிபர் டிரம்ப் அறிவித்த 'கோல்டு கார்டு' திட்டத்திற்கு அமோக வரவேற்பு
-
கடையநல்லுாரில் மாணவியர் விடுதி: அமைச்சர் உறுதி
-
தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை மையம் அனைத்து நகரங்களிலும் அமைக்க முடிவு
-
வீட்டில் இருந்த 4 சவரன் நகை மாயம்
-
அரசுக்கு நிதி தட்டுப்பாடு அமைச்சர் வெளிப்படை
-
'ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை'