வீட்டில் இருந்த 4 சவரன் நகை மாயம்

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, டிமல்லஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் சினேகா, 23, இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சினேகா தினமும் காலையில் தையல் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார்.

இவர்கள் வெளியே செல்லும் போது வீட்டின் கதவை பூட்டி சாவியை வெளியே உள்ள அலமாரியில் வைத்து விட்டு செல்வது வழக்கம்.

சில தினங்களுக்கு முன் வீட்டு சாவியை பக்கத்து வீட்டில் உள்ள மாரியம்மாள் என்பவரிடம் கொடுத்த சினேகா, 'கணவர் வந்ததும் கொடுத்து விடுங்கள்' எனக்கூறி கொடுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பீரோவை பார்த்த போது, 4 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. இதுகுறித்து பேசின்பாலம் காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement