'ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை'

சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - வைத்திலிங்கம்:
மாமன்னன் ராஜராஜ சோழன் கப்பல் படையை உருவாக்கியவர். இந்திய கடற்படைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில், 216 அடி உயரத்தில் கோவில் கட்டிய அவருக்கு, 100 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும். ஹிந்து அறநிலையத் துறையால் அமைக்க முடியாவிட்டாலும், அரசு சிலை அமைத்துத்தர வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு:
சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு நிச்சயம் வாய்ப்பிருந்தால், சிலை வைப்பதற்கு அறநிலையத் துறை பணிகளை மேற்கொள்ளும்.

Advertisement