இன்ஜினியரிங் கல்லுாரியில் தொழில் முனைவோர் மாநாடு
ஈரோடு: கோபி அருகே ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் கல்லுாரியில், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. கல்லுாரி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தனியார் நிறுவன முதன்மை அதிகாரி ஆச்சர், சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு சென்னை மைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், பழனிச்சாமி பேசினர். சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கல்லுாரி தலைவர் வெங்கடாசலம், இணை செயலாளர் கெட்டிமுத்து, தலைமை நிர்வாக அதிகாரி கவுதம், இயக்குனர் கவியரசு, சிறுகுறு நிறுவன நிர்வாகிகள் மேலாண்மை துறை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் தங்கவேல் வரவேற்றார். எந்திரவியல் துறை தலைவர் மோகன்குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
அதிபர் டிரம்ப் அறிவித்த 'கோல்டு கார்டு' திட்டத்திற்கு அமோக வரவேற்பு
-
கடையநல்லுாரில் மாணவியர் விடுதி: அமைச்சர் உறுதி
-
தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை மையம் அனைத்து நகரங்களிலும் அமைக்க முடிவு
-
வீட்டில் இருந்த 4 சவரன் நகை மாயம்
-
அரசுக்கு நிதி தட்டுப்பாடு அமைச்சர் வெளிப்படை
-
'ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை'