'ஜாக்டோ - ஜியோ' உண்ணாவிரத போராட்டம்

திருப்பூர்: திருப்பூரில் நேற்று 'ஜாக்டோ - ஜியோ' சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

'ஜாக்டோ - ஜியோ' சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சந்திசேகரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பிரபு செபாஸ்டின், தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு பாலசுப்பிரமணியன், முதுகலை ஆசிரியர்கள் சங்கம் ராஜேஸ்வரி உள்பட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரும், கலெக்டர் அலுவலகம் எதிரே, பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement