முதியவரை தாக்கிய வாலிபர் கைது

திரு.வி.க.நகர், பெரம்பூர், தீட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வேலன், 75; அப்பகுதியில் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டருகே வண்டியை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த தேவராஜ், 22 மீன்பாடி வண்டி மீது மோதியுள்ளார்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், தேவராஜ் அருகில் இருந்த கட்டையை எடுத்து, வேலனை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளன. அவர் அளித்த புகாரின்படி, ரவுடி தேவராஜை திரு.வி.க.நகர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement