கேட்பாரற்ற 48 டூ - வீலர்கள் ஏப்., 7ல் பொது ஏலம்
பெரும்பாக்கம், தாம்பரம் காவல் ஆணையகத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் காவல் நிலைய பகுதிகளில், நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட, 48 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வாகனங்கள் அனைத்தும், ஏப்., 7ம் தேதி பகிரங்க ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஏல விற்பனையில் பங்கேற்போர், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில், ஏப்., 4ம் தேதி காலை 10:00 மணி முதல் 5:00 மணிக்குள், அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவு எண் ஆதாரங்களுடன், 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். அன்றைய தினமே, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான முழு தொகையுடன் ஜி.எஸ்.டி.,யும் சேர்த்து செலுத்தி விற்பனை ஆணை வழங்கப்பட்டவுடன் வாகனத்தை எடுத்து செல்லலாம்.
இந்த தகவலை, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு