சுங்கச்சாவடி கட்டண உயர்வு ரத்து செய்ய கோரிக்கை

கோயம்பேடு,
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிக்கை :

தமிழகத்தில் ஏப்ரல் 1முதல் 40 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை மேலும் பாதிப்படைந்து, பொதுமக்கள் மீது கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.

பொருட்களின் விலையேற்றமும் ஏற்படும். ஆகையால், பொதுமக்களின் நலன் கருதி, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், மாநில அரசும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

***



Advertisement