பொம்மிடி பஸ் ஸ்டாண்டில் ரூ.50 லட்சத்தில் மேற்கூரை
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி பஸ் ஸ்டாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கூரை அமைக்கப்பட்டது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ.,க்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார் முன்னிலையில், முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், மாபா பாண்டியராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம் துரிஞ்சிப்பட்டி, கடத்துார் கிழக்கு ஒன்றியம் மணியம்பாடியில் நடந்த, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிபர் டிரம்ப் அறிவித்த 'கோல்டு கார்டு' திட்டத்திற்கு அமோக வரவேற்பு
-
கடையநல்லுாரில் மாணவியர் விடுதி: அமைச்சர் உறுதி
-
தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை மையம் அனைத்து நகரங்களிலும் அமைக்க முடிவு
-
வீட்டில் இருந்த 4 சவரன் நகை மாயம்
-
அரசுக்கு நிதி தட்டுப்பாடு அமைச்சர் வெளிப்படை
-
'ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை'
Advertisement
Advertisement