தண்ணீர் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், பேரூராட்சி சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலினி மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழங்கள், குளிர் பானங்கள் போன்றவற்றை வழங்கினார்.

Advertisement