மாவட்ட கயிறு இழுக்கும் போட்டி தாம்பரம் சி.எஸ்.ஐ., பள்ளி தங்கம்

சென்னை,
சென்னை மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில், பள்ளிகள் இடையேயான கயிறு இழுக்கும் போட்டிகள், விருகம்பாக்கம், ஆவிச்சி பள்ளி மைதானத்தில் நடந்தன.

இரு பாலருக்குமான இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 13, 15 மற்றும் 17 ஆகிய வயது பிரிவில் நடந்தன.

இதில், 13 வயது பெண்கள் பிரிவில், அரும்பாக்கம் டேனியல் தாமஸ் பள்ளி முதலிடத்தையும், விருகம்பாக்கம் காவேரி பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

ஆண்கள் பிரிவில், தாம்பரம் சி.எஸ்.ஐ., பள்ளி தங்கமும், விருகம்பாக்கம் காவேரி பள்ளி வெள்ளியும் வென்றன.

அதேபோல், 15 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில், காவேரி, சி.எஸ்.ஐ., பள்ளி அணிகள் முறையே முதல், இரண்டாம் இடங்களை பிடித்தன.

ஆண்கள் பிரிவில் ஆவிச்சி, காவேரி பள்ளி அணிகள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்தன.

பெண்கள் 17 வயது பிரிவில், காவேரி, சி.எஸ்.ஐ., பள்ளி அணிகளும், ஆண்கள் பிரிவில், எஸ்.ஆர்.எம்., ஆவிச்சி பள்ளி அணிகளும், முதல் மற்றும் இரண்டாம் இடங்களை கைப்பற்றின.

மாவட்ட அளவிலான இப்போட்டியில், முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த அணிகள், ஏப்ரல் 12, 13ம் தேதிகளில், பெரம்பலுாரில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement