உணவு பாதுகாப்பு துறையினர் ஒகேனக்கல் கடைகளில் சோதனை

ஒகேனக்கல்: பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுசாமி ஆகியோர் தலைமையில், ஒகேனக்கல்லில் உள்ள கடைகளில் ஆய்வு நடந்தது. பல இடங்களில் கெட்டுபோன மீன்கள், பொருட்கள் காலாவதி ஆகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, மீன் விற்பனை கூடாரம் மற்றும் குளிர்பான கடைகள் முதலை பண்ணை பகுதியில் உள்ள மீன் வறுவல் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலை பண்ணை அருகே உள்ள மீன் வறுவல் கடைகள், அருவி பகுதியிலுள்ள மீன் வறுவல் கடைகளில் இருந்து மீன் வறுவலுக்கு மீண்டும் மீண்டும் உபயோகித்த எண் ணெய்‍ கைப்பற்றி அழிக்கப்பட்டது.

மீன் வறுவல் கடைகள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியதுடன், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒகேனக்கல் பகுதியில் உணவுகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆய்வில் நல்லம்பள்ளி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்குமார், மீன் வளத்துறை மேற்பார்வையாளர் குமரவேல், மீன்வள தேர்வு நிலை பாதுகாவலர் ஜீவா உடனிருந்தனர்.

Advertisement