இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு நிதியுதவி
அரூர்: அரூரில், பணியின்போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு, சக போலீஸ்காரர்கள் மூலம் திரட்டிய நிதியை, டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கட்டக்காடுவை சேர்ந்தவர் குமார், 42. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் காவலராக பணியாற்றிய அவர், கடந்தாண்டு டிச., 7ல் உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, 2010ல் அவருடன் பணியில் சேர்ந்த போலீசார் ஒன்றிணைந்து, குமார் குடும்பத்திற்கு உதவி செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்களின், தபால் நிலைய சேமிப்பு கணக்கு மூலம் சேகரித்த, குடும்ப நல நிதியான, 16.27 லட்சம் ரூபாயில், குமாரின், 4 பெண் குழந்தைகள் பெயரில், 14 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று அரூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில், குமாரின் பெற்றோருக்கு, ஒரு லட்சம் ரூபாயும், மனைவி ஜெயலட்சுமிக்கு, 1.27 லட்சம் ரூபாயும் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் வழங்கினார்.

மேலும்
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம் இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம்
-
ஏரிக்கரை சாலையில் பற்றி எரிந்த தீ
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்
-
மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: நேரு
-
மாவட்ட கயிறு இழுக்கும் போட்டி தாம்பரம் சி.எஸ்.ஐ., பள்ளி தங்கம்
-
கராத்தே பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மறைவு