மதுரையில் போலீஸ்காரர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

7

மதுரை: மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.


விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை காவலர். இவரது மனைவி பாண்டிச்செல்வி 33. இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பியபோது மானாமதுரை அருகே வாகனம் ஒன்று மோதியதில் பாண்டிச்செல்வி இறந்தார்.


விடுமுறையில் இருந்த மலையரசன், மார்ச் 18 ல் மதுரை ரிங் ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பெருங்குடி போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.



இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் எஸ்.ஐ., மாரி கண்ணனை வெட்ட முயன்று தப்ப முயற்சிக்கும்போது துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்தனர்.

Advertisement