பள்ளி, கல்லுாரி ஆண்டு விழா

ராமநாதபுரம்: ஏர்வாடி முத்தரையர் நகர் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.தலைமையாசிரியர் புல்டன் தலைமை வகித்தார். போட்டிகளில்வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் கிராமத்தலைவர் செல்லம், செயலாளர் பக்கீர், எஸ்.எம்.சி., குழு தலைவர் கலாதேவி, ஆசிரியர்கள் ஏசையா பிரபாகரன், சந்தனகனி, வீரலட்சுமி,ஜெஸியா, சுபா, பிரிஜிதா, சோலைராஜா, முருகன், பெற்றோர்,மாணவர்கள் பங்கேற்றனர்.

*ராமநாதபுரம் புல்லங்குடி அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா, விளையாட்டு விழா முதல்வர் உதயகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், முதல்வர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

* ராமநாதபுரத்தில் ஹிந்து வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நிறுவனர் தலைவர் எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கிரிஷா சேஷாத்திரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராமசுப்பு வரவேற்றார். முதல்வர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக முரளிதரன் அன்கோ ஆடிப் பார்மின் நிர்வாக பங்குதாரர் சிவசுந்தரேஸ்வரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.கணேஷ் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அரசு உதவி பெறும் சரஸ்வதி துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ராமேஸ்வரம் ஜெ.ஜெ.,நகரில் உள்ள சரஸ்வதி துவக்கப்பள்ளி அரசு நிதி உதவியில் நடக்கிறது. பஜ்ரங்தாஸ் சேவா அறக்கட்டளை சார்பில் பழமையான பள்ளியில் 70 மாணவர்கள் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச வேன், நோட்புக், சீருடை வழங்கப்பட்டு வகுப்பறையில் இருக்கை வசதியும் உள்ளது. பள்ளியில் 93வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

இதில் பள்ளி தாளாளர் சீதாராம்தாஸ் பாபா, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், தாசில்தார் அப்துல்ஜபார், தலைமை ஆசிரியர் மாலா சங்கரி, பள்ளி கல்விக் குழு நிர்வாகிகள் தேவதாஸ், ஜெயகாந்தன், முருகன், சுடலை, ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.

முப்பெரும் விழா

கீழக்கரை: ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

கடலாடி வட்டார கல்வி அலுவலர் வசந்தபாரதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் தங்கமணி வரவேற்றார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நாடகம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு உள்ளிட்டவைகள் நடந்தது.

மாணவர்களின் சிலம்பாட்டம் நடந்தது. கல்வி, விளையாட்டு கலை நிகழ்ச்சி, 100 சதவீதம் வருகை, தேசிய வருவாய் மற்றும் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் மனோன்மணி, அம்பேத்குமார், கோசிஜின் ஞானாயுதம் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.

Advertisement